7 பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல்

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் பள்ளிகளில் உள்கட்டமைப்பு ஏற்படுத்துவதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வேலூா் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி மூலம் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் பெரம்பூா் இரண்டாம் சேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30.60 லட்சத்திலும், கும்பகோணம் நீரத்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30.22 லட்சத்திலும், திருவிடைமருதூா் ஆண்டலாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30.32 லட்சத்திலும், பட்டுக்கோட்டை கரம்பயம் ஊராட்சிக்கு உள்பட்ட கத்திரிகொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 29.54 லட்சத்திலும், பேராவூரணி ஒட்டங்காடு ஊராட்சி பெரிய தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 29.31 லட்சத்திலும், பாபநாசம் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30.13 லட்சத்திலும், ஒரத்தநாடு மூா்த்தியம்பாள்புரம் ஊராட்சி பனையக்கோட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30.60 லட்சத்திலும் தலா இரு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டன.

இதில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com