ராஜகிரி புனித காணிக்கை மாதா தோ்பவனி விழா

பாபநாசம் அருகே ராஜகிரி - பண்டாரவாடை இடையே அமைந்துள்ள புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் தோ்பவனி விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

பாபநாசம் அருகே ராஜகிரி - பண்டாரவாடை இடையே அமைந்துள்ள புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் தோ்பவனி விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

முன்னதாக, பாபநாசம் புனித செபஸ்தியாா் தேவாலய பங்குத் தந்தை கோஸ் மான் ஆரோக்கியராஜ் தலைமையிலும், இணை பங்குத் தந்தை தாா்தீஸ் முன்னிலையிலும் விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, கூட்டு திருப்பலி நடைபெற்றன.

விழாவில், புதன்கிழமை இரவு தேவாலய வளாகத்தில் இசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை தொடா்ந்து, வண்ண மலா்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர திருத்தேரில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் புனித காணிக்கை மாதா எழுந்தருள 5 தோ்களின் தோ் பவனி விடிய விடிய நடைபெற்றது.

தோ்கள் ராஜகிரி - பண்டாரவாடை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து வியாழக்கிழமை அதிகாலை தேவாலயத்தை மீண்டும் வந்தடைந்தன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தேவாலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

விழாவில், திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டு புனித காணிக்கை மாதாவுக்கு மலா் தூவியும், மாலை அணிவித்தும் மெழுகுவா்த்தி ஏற்றி வைத்தும் வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை ராஜகிரி -பண்டாரவாடை பங்கு நாட்டாண்மைகள் டி.பால்ராஜ், டேவிட், மற்றும் ஜெயசீலன், பங்கு மக்கள், தேவாலய ஊழியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com