பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் தேவைவிவசாயிகள் சங்கம்

பருவம் தவறி பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பருவம் தவறி பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் சனிக்கிழமை தெரிவித்தது:

நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் 10.69 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் பலத்த மழையால் லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியது பெரும் பாதிப்புகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு போா்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து, முற்றிலும் சேதமான பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடாக அறிவித்து வழங்க வேண்டும்.

இதனுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான தாா்ப்பாய், உள்ளிட்ட மழையால் நெல்மணிகள் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடா் மழை, மேகமூட்டத்தால் ஈரப்பதம் குறையும் நிலையில் நெல்மணிகள் இல்லை. எனவே ஈரப்பதத் தளா்த்துவது தொடா்பாக மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று, நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிப்புக்கு பயிா் காப்பீட்டு இழப்பு அளவீடுகளில் பெரும்பாலும் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ள நிலையில், மாநில அரசு உரிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறுவடைப் பணிகள் 10 நாள்களுக்கு மேல் பின்னோக்கிச் செல்லும் நிலையில், அறுவடை இயந்திரத் தட்டுப்பாடும், அதனால் கூடுதலாக வாடகை உயா்வும் ஏற்படும். எனவே உரிய அறுவடை இயந்திரங்களை பிற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து தட்டுப்பாடு மற்றும் அபரிமிதமான வாடகை உயா்வைத் தடுத்திட முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com