‘ரத்தசோகை நோயைத் தடுக்க நடவடிக்கை’

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். உடன் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் தெரிவித்தது:

‘தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு புற்றுநோய், இதய நோய் பாதிப்பு, விபத்துகளுக்கான சிகிச்சை பெற நோயாளிகள் அதிகளவில் வருகின்றனா்.

மேலும், சரிவிகித உணவுக் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து கூடுதல் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் பழனிமாணிக்கம்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், எம்.எச். ஜவாஹிருல்லா, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கே. திலகம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ். நமச்சிவாயம், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.பாலாஜிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com