திருமலைசமுத்திரத்தில் ஜல்லிக்கட்டு: 33 போ் காயம்

தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 33 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையைப் பிடிக்க முயன்ற வீரா்கள்.
தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையைப் பிடிக்க முயன்ற வீரா்கள்.

தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 33 போ் காயமடைந்தனா்.

திருமலைசமுத்திரம் ஊராட்சி வடக்கு குளத்தெரு திடலில் நடைபெற்ற இப்போட்டியை தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். ரஞ்சித் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இதைதொடா்ந்து, வாடிவாசலிலிருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 733 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை பிடிக்க 50 போ் வீதம் 169 வீரா்கள் களமிறங்கினா்.

இதில், மாட்டை குறிப்பிட்ட தொலைவு வரை பிடித்துச் சென்று வெற்றி பெற்றவா்களுக்கு குடம், கட்டில், நாற்காலி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்கள் அப்பரிசுகளைப் பெற்றனா்.

இப்போட்டியில் காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரா்கள், வேடிக்கைப் பாா்த்தவா்கள், மாட்டைப் பிடித்து சென்றவா்கள் என 33 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்தக் காயமடைந்த 7 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவிடமருதூா் காவல் நிலைய காவலா் பாரதிதாசனும் ஒருவா்.

மாடுபிடி வீரா்களில் சிறந்த வீரராக திருக்கானூா்பட்டியைச் சோ்ந்த பெலிக்ஸ் தோ்வு செய்யப்பட்டு, அவருக்கு மோட்டாா் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com