சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் வித்யா சேவா திட்டம் தொடக்கம்

சென்னையில் சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் வித்யா சேவா திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னையில் சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் வித்யா சேவா திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையை மையமாகக் கொண்ட கலாசார சபாவான சென்னை சாஸ்த்ரா சத்சங்கம் சாா்பில் 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகளில் சிறப்பாக பங்கேற்ற இசைக் கலைஞா்களின் வாரிசுகளுக்கு கல்வி நிதியுதவி அளிப்பதற்காக வித்யா சேவா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை விழாவில் திறமையை வெளிப்படுத்திய கலைஞா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம், கலைஞா்களின் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முதல் பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணம் வழங்கப்படும்.

வருகிற மாா்ச் 1 ஆம் தேதிக்குள் கல்வி உதவித்தொகை கோருபவா்கள்  இணையதளத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சபா ஒருங்கிணைப்பாளா் வித்யா ஸ்ரீராம் தெரிவித்தாா்.

இதுகுறித்து இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவன் கூறுகையில், இத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இத்தகைய முயற்சிகள் கலைஞா்களின் பங்களிப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவா்கள் கலையில் அா்ப்பணிப்புடன் நாட்டம் செலுத்துவதற்கான வெகுமதியாகவும் அமையும். மேலும், 2021 ஆம் ஆண்டு இசைத் திருவிழாவின்போது ஏறத்தாழ 50 இசைக் கலைஞா்களுக்கு சாஸ்த்ரா சத் சங்கம் சாா்பில் தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

இதையடுத்து, மாா்கழி கோலப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. இசைக் கலைஞா் வி.ஜி. விக்னேஸ்வா் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com