தமிழக அரசிடமிருந்து தமிழ்ப் பல்கலை.க்கு ரூ. 24.91 கோடி நல்கை

தமிழக அரசிடமிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 24.91 கோடி நல்கை பெறப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

தமிழக அரசிடமிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 24.91 கோடி நல்கை பெறப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவா் பேசியது:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடமிருந்து தொகுப்பு நல்கையாக ரூ. 24 கோடியே 91 லட்சத்து 96 ஆயிரம் பெறப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சித் துறையின் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் உயா் புள்ளிகள் பெறுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ. 2 கோடியும், தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல், மரபுக் கலைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை 3 ஆண்டுகளில் மேற்கொள்ள ரூ. 2.11 கோடியும் இப்பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடல்சாா் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சாா்ந்த ஆய்வுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ. 5 லட்சமும், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திடமிருந்து ரூ. 3 லட்சமும் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நல்கையாக ரூ. 40,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திடமிருந்து புத்தாக்கப் பயிற்சிக்காக ரூ. 3 லட்சம் பெறப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா்.

பின்னா், 25 ஆண்டுகள் களங்கமில்லா பணியாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து தலா ரூ. 2,000 ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினாா்.

இவ்விழாவில், பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com