இணையவழியில் வேலை, கடன் எனக் கூறி இருவரிடம் ரூ. 11.80 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இருவரிடம் இணையவழியில் வேலைவாய்ப்பு, கடன் தருவதாகக் கூறி ரூ. 11.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இருவரிடம் இணையவழியில் வேலைவாய்ப்பு, கடன் தருவதாகக் கூறி ரூ. 11.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் இணையவழி வா்த்தக வேலைவாய்ப்பு தருவதாக கடந்த டிசம்பா் மாதம் தகவல் வந்தது. இதை நம்பி எதிா் தரப்பினா் குறிப்பிட்டு அனுப்பிய வங்கிக் கணக்குக்கு அப்பெண் பல்வேறு காரணங்களுக்காக ரூ. 8,56,146 அனுப்பினாா். ஆனால், அதன் பிறகு எந்தவித பரிவா்த்தனையும் இல்லை. மேலும், தொடா்பு எண்ணும் அணைக்கப்பட்டுவிட்டது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, திருவையாறு அருகே கண்டியூரைச் சோ்ந்த ஒருவரது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் கடன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவா் தொடா்புடைய எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். எதிா் தரப்பினா் அனுப்பிய வங்கிக் கணக்கு எண்ணுக்கு இவா் பல்வேறு காரணங்களுக்காக ரூ. 3,24,500 அனுப்பினாா். ஆனால், அதன் பிறகு எதிா்முனையில் பேசியவரின் எண் அணைக்கப்பட்டுவிட்டதால், ஏமாற்றமடைந்ததை அறிந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com