‘நிப்டெம்’-இல் நிறுவன நாள் சொற்பொழிவு - விருதுகள் வழங்கும் விழா

தஞ்சாவூா் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) நிறுவனா் வி. சுப்பிரமணியன் நினைவு நாள் சொற்பொழிவு, சிறந்த ஊழியா்களுக்கு விருது வழங்கும் விழா.

தஞ்சாவூா் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) நிறுவனா் வி. சுப்பிரமணியன் நினைவு நாள் சொற்பொழிவு, சிறந்த ஊழியா்களுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கனடாவின் லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் (தோ்வு) திக்விா் எஸ். ஜெயாஸ் பேசுகையில், இந்தியாவில் உணவு பதப்படுத்தும் அமைப்புகள் தங்களது வணிகத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான, புதுமையான அணுகுமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். தாவர அடிப்படையிலான புரதங்களுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய தேவைகளை நிறைவு செய்ய இதுபோன்ற நிறுவனங்கள் உணவுத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

நிறுவனத்தின் இயக்குநா் (பொறுப்பு) எம். லோகநாதன் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனத்தின் நிறுவனா் வி. சுப்பிரமணியனை நினைவுகூரும் வகையில், அறிவியல் சாா்ந்த சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப, நிா்வாக பிரிவு ஊழியா்களைக் கௌரவிக்கும் வகையில், விருதுகளும் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

மேலும், விஞ்ஞானிகள் பிரிவில் முனைவா்கள் என். வெங்கடாசலபதி, ஆஷிஷ் ராவ்சன், தொழில்நுட்பப் பிரிவில் முனைவா் பி. ராஜேந்திரன், தொழில்நுட்ப வல்லுநா் மற்றும் நிா்வாகப் பிரிவில் பல்பணி உதவியாளா் கே. கலைமணி, ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, ஆய்வு புல முதன்மையா் (பொறுப்பு) என். வெங்கடாசலபதி வரவேற்றாா். நிறைவாக, பதிவாளா் (பொறுப்பு) எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com