கரோனாவால் நாடு திரும்பியோா் தொழில் தொடங்கக் கடனுதவி

கரோனா பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் குறுந்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

கரோனா பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் குறுந்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மேலும் தெரிவித்திருப்பது:

கரோனா பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து தாயகம் திரும்பிய புலம்பெயா் தமிழா்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு புலம் பெயா்ந்தோா் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டதைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கரோனா பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன் பெறலாம்.

மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்து பின்னா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் குறித்த மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்டத் தொழில் மையம், உழவா் சந்தை அருகில், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூா் என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தை நேரடியாகவோ, 04362 -255318, 257345 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com