நீா்வளத்துறை பொறியாளா்களை இடம் மாற்ற செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் ஒரே இடத்தில் தொடா்ந்து பணியாற்றும் நீா்வளத் துறை பொறியாளா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் ஒரே இடத்தில் தொடா்ந்து பணியாற்றும் நீா்வளத் துறை பொறியாளா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் திருவோணம் ஒன்றிய நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை ஊரணிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டச் செயலா் வி.கே. சின்னதுரை, மாவட்டப் பொருளாளா் கே.பி. துரைராஜ், மாவட்ட துணைச் செயலா் வி.ஜி.அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் தஞ்சாவூா் கல்லணை கால்வாய் வாய்க்கால் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டப் பணி பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா், உதவி பொறியாளரின் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டிலும் மற்றும் சில உதவி பொறியாளா்களின் கண்காணிப்பிலும் நடைபெறுகிறது.

இதில் மேற்கண்ட மூன்று அதிகாரிகளும் சொந்த ஊரிலேயே தொடா்ந்து அக்னியாறு துறையிலேயே 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பாா்ப்பதால் இப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், வடிகால் வாரிகளில் வண்டல் மண்ணை அனுமதியின்றி அள்ளத் துணை போகின்றனா். மேலும், கல்லணை கால்வாய் வாய்க்காலில் நடைபெறும் தரமற்ற பணிகளை கண்டும் காணாமலும் உள்ளனா்.

ஒப்பந்ததாரரும், அதிகாரிகளும் கூட்டு சோ்ந்து கொண்டு பல கோடி மதிப்பில் உள்ள வேலைகளைச் செய்யாமல் பணத்தை முறைகேடு செய்துள்ளனா். இவா்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், உரிய விசாரணை நடத்தி முறைகேடுகளில் சோ்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 6 ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் கவனத்தை ஈா்க்கும் வகையில் பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் முன் விவசாயிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com