தொமுச சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் தொமுச சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொமுச சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் தொமுச சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கருணாநிதி படத்துக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன், பொது மேலாளா் முகமது நாசா், ஒன்றியச் செயலா்கள் தி. கணேசன் (கும்பகோணம் மத்திய), ஜெ. சுதாகா் (கும்பகோணம் கிழக்கு), தொமுச மத்திய சங்கத் தலைவா் கோ. சங்கரன், துணைத் தலைவா் ஆ. சுரேஷ், பொருளாளா் எஸ். திருவரசமூா்த்தி, துணைப் பொதுச் செயலா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com