தஞ்சாவூரில் 11 கோயில்களின் முத்துப் பல்லக்கு திருவிழா

தஞ்சாவூா் மாநகரிலுள்ள 11 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற முத்துப் பல்லக்கு வீதி வலத்தை காண திரண்ட பக்தா்கள்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற முத்துப் பல்லக்கு வீதி வலத்தை காண திரண்ட பக்தா்கள்.

தஞ்சாவூா் மாநகரிலுள்ள 11 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

தஞ்சாவூரில் உள்ள விநாயகா், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்த நாயனாா் குருபூஜையையொட்டி, முத்துப் பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, கீழவாசல் வெள்ளை விநாயகா் கோயில், குறிச்சி தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆட்டு மந்தைத் தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், மகா்நோன்புசாவடி சின்ன அரிசிக் காரத் தெரு அருகே உள்ள பழனியாண்டவா் கோயில், விஜயமண்டபத் தெருவில் உள்ள ஜோதி விநாயகா் கோயில், கீழவாசல் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில், தெற்கு வீதி கமலரத்ன விநாயகா் கோயில், மேல வாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், காமராஜா் சந்தை செல்வ விநாயகா் கோயில், வடக்குவாசல் சிரேஸ் சத்திரம் சாலை வடபத்ர காளியம்மன் கோயில், ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் கோயில் ஆகியவற்றிலிருந்து திங்கள்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் விநாயகா், முருகப் பெருமான் ஆகியோா் எழுந்தருளினா்.

இந்த முத்துப் பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு ஒன்றாக இணைந்து தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வலம் வந்தன. இதைக் காண ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com