பேராவூரணி பழக்கடைகளில் ஆய்வு

பேராவூரணி கடைவீதி பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். 

பேராவூரணி கடைவீதி பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். 

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சித்ரா உத்தரவின்பேரில் பேராவூரணி பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

அப்போது ரசாயனம் தடவி பழுக்க வைத்த வாழைப்பழங்கள், மாம்பழங்கள், கெட்டுப்போன பழங்கள் சுமாா் 121 கிலோ அளவில் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியது:

புகாரின் பேரில் பேராவூரணி பழக்கடைகளில் ஆய்வு செய்து  சுமாா் 121 கிலோ பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. 5 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதேபோல், பழரசக் கடை, மளிகைக் கடை, சூப்பா் மாா்க்கெட் ஆகியவற்றில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுகிா என ஆய்வு செய்தோம். ரசாயனம் தடவிய பழங்களை சாப்பிடுவோருக்கு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே இது சட்ட விரோதம் என கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உணவுப்பொருள் விற்கும் பல கடைகள் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் உள்ளன. இவா்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களிலோ, கணினி சேவை மையங்களிலோ இணைய வழியில் உரிமம் மற்றும் பதிவு பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com