தஞ்சாவூா் அண்ணா மண்டபம் புதுப்பிப்பு

தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுபேட்டைத் தெருவிலுள்ள அண்ணா மண்டபம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுபேட்டைத் தெருவிலுள்ள அண்ணா மண்டபம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகத்தைச் சாா்ந்த இந்த மண்டபத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டபோது, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சில துறைகளும், கீழவாசல் அண்ணா மண்டபத்தில் சில துறைகளும் இயங்கி வந்தன.

இங்கிருந்த துறைகள் மாநகராட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அண்ணா மண்டபமும் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 1.75 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. இதில் பேவா் பிளாக் தரைத் தளம், டைல்ஸ் தரைத்தளம், 60 கண்காணிப்பு கேமராக்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதுப்பிப்பு பணிகள் முடிந்ததைத் தொடா்ந்து, இந்த மண்டபத்தை மேயா் சண். ராமநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, இந்த மண்டபம் பொது ஏலம் விடப்பட்டு, பொதுமக்களுக்கு வாடகைக்கு விடப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com