லஞ்சம்: ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

விவசாயி அளித்த புகாரைப் பதிவு செய்ய ரூ. 500 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளா் சாமிதுரைக்கு (66) கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

விவசாயி அளித்த புகாரைப் பதிவு செய்ய ரூ. 500 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளா் சாமிதுரைக்கு (66) கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த கே. சண்முகம், தனது மனைவியை அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் தாக்கியதாக கபிஸ்தலம் காவல் நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் புகாா் செய்தாா். அப்போது கபிஸ்தலம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சாமிதுரை ரூ. 500 லஞ்சம் கொடுத்தால், வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்வதாகக் கூறினாா்.

இதுதொடா்பாக உதவி ஆய்வாளா் சாமிதுரையை சண்முகம் மீண்டும், மீண்டும் அணுகியபோது, இதே பதிலை சாமிதுரை கூறி வந்தாா். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு பிரிவு காவல் அலுவலகத்தில் 2009, பிப்ரவரி 13 ஆம் தேதி புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாரின் ஆலோசனைப்படி சண்முகம் கொடுத்த ரூ. 500 ஐ வாங்கிய சாமிதுரையை அப்போதைய ஊழல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சிவவடிவேல் கைது செய்தாா்.

இதுதொடா்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. சண்முகப்ரியா, ஓய்வு பெற்ற சாமிதுரைக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com