முன்னாள் அமைச்சா் உபயதுல்லா உடல் அடக்கம்: கட்சித் தலைவா்கள் அஞ்சலி

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமான திமுக முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா உடல் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமான திமுக முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா உடல் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, தஞ்சாவூா் கல்லுக்குளத்தில் உள்ள உபயதுல்லாவின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா், திமுக செய்தி தொடா்பு செயலா் டி.கே.எஸ். இளங்கோவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் உள்பட ஏராளமானோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தஞ்சாவூரில் உள்ள அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சாா்பில் இரங்கல் பேரணி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தஞ்சாவூா் மேரிஸ் காா்னா் பகுதியில் புறப்பட்ட பேரணி உபயதுல்லா வீடு வரை சென்று, அவரது உடலுக்கு மலா்வளையம் வைத்து அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, இறுதி ஊா்வலம் அவரது இல்லத்திலிருந்து திங்கள்கிழமை முற்பகல் புறப்பட்டது. இதில், மக்களவை உறுப்பினா்கள் டி.ஆா். பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினா், இலக்கிய அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னா், ஆற்றுப்பாலம் ஜூம்மா பள்ளிவாசலிலுள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com