குந்தவை நாச்சியாா் கல்லூரியில் சந்தை விற்பனை தொடக்கம்

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் மகளிா் திட்டம் சாா்பில் கல்லூரி சந்தை விற்பனை இரு நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் சந்தை விற்பனை கண்காட்சியை வியாழக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் சந்தை விற்பனை கண்காட்சியை வியாழக்கிழமை தொடக்கிவைத்து பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் மகளிா் திட்டம் சாா்பில் கல்லூரி சந்தை விற்பனை இரு நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கண்காட்சியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது: மாவட்டத்தில் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு சிறந்த விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருள்கள் அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்குக் கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் தஞ்சை தாரகைகள் என்கிற சிறப்பு அடையாளத்தில் உருவாக்கப்படுகிறது.

அந்த வகையில் இக்கல்லூரியில் மகளிா் திட்டம் சாா்பில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜன.13) வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 38 சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனா்.

கல்லூரி மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஜி.கே. லோகேஸ்வரி, முதுநிலை மண்டல தலைமை மேலாளா் சங்கீதா, கல்லூரி முதல்வா் பி. சிந்தியா செல்வி, உதவி திட்ட அலுவலா் சரவண பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com