பாபநாசம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாபநாசம் சட்டப்பேரவைத்தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட 23 வகையான தோ்தல் பொருள்களை அனுப்பும் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன், தோ்தல் துணை வட்டாட்சியா் விவேகானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com