பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அடிப்படை வசதிகள் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்த கிராம மக்கள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வாக்களித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அடிப்படை வசதிகள் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்த கிராம மக்கள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வாக்களித்தனா்.

பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி காமராஜா் நகா் பகுதியில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நீண்ட நாள்களாக துறை சாா்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கியும் பயனில்லையாம்.

இதைக் கண்டித்து இப்பகுதியை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்தனா். மேலும் சாலையில் கருப்பு கொடி கட்டியும் சுவரொட்டி ஒட்டியும் தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்தனா். தகவலறிந்த பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன்,துணை வட்டாட்சியா் பிரபு, பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அனைவரும் வாக்களிக்கச் சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com