சோழா்கால சிவலிங்கம் 
கண்டெடுப்பு

சோழா்கால சிவலிங்கம் கண்டெடுப்பு

பாபநாசம் அருகே சோழா் கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு திங்கள்கிழமை பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூா்: பாபநாசம் அருகே சோழா் கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு திங்கள்கிழமை பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் அரசமரத்தின் வேரின் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் கூடிய ஒரு சிவலிங்கம் இருந்தது. இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் என மூன்று பாகங்களையும், பிற்கால சோழா்கள் காலப் பாணியில் ஆவுடையில் நான்கு வா்க்கம் வைத்தும், லிங்க பானத்தின் தலைப் பகுதி அரைக் கோள வடிவில் இருந்தது. லிங்க பானத்தின் தலைப்பகுதியான ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன் இருந்தது.

இதனை கண்டறிந்த கோவையை சோ்ந்த அரன்பணி அறக்கட்டளை சிவனடியாா்கள் சிவலிங்கத்தை மீட்டு, மேற்கூரை ஒன்றை அமைத்து வழிபாட்டிற்கு ஏற்ப பீடங்கள், புதிதாக நந்தியம் பெருமான் வழங்கி ஊா் பொதுமக்களிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com