கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை மேலும் தெரிவித்திருப்பது:

இந்நிலையத்தில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான முன்பதிவு மேலாண்மை நிலையத்தால் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி செப்டம்பரில் தொடங்கி ஓராண்டு காலம் நடைபெறும். இரு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும்.

இப்பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சி கட்டண விவரங்கள், நிபந்தனைகள் விரைவில் வெளியிடப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் பிளஸ் 2 தோ்ச்சியும், 17 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

பயிற்சியில் சேருவது குறித்த நிபந்தனைகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் விரைவில் வெளியிடப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04362 - 238253 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com