வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

மற்ற மாநிலங்களில் நடைபெறும் இதர கட்டத் தோ்தலுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம் என தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தி. கமலா தெரிவித்திருப்பது:

மக்களவைத் தோ்தல் இரண்டாம் கட்டமாக கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.26), மே 7 ஆம் தேதியும், கேரளத்தில் வெள்ளிக்கிழமையும், ஆந்திர மாநிலத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்கள் மே 13 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் அவா்களுடைய சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலத் தோ்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தோ்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக 99526 39441, 85267 68823, 99769 75149, 04362 - 264886 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com