பேராவூரணி நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா்.
பேராவூரணி நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா்.

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

பேராவூரணி நீதிமன்றத்துக்கு சொந்த  கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேராவூரணியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக  வட்டாட்சியா் அலுவலக  வளாகத்தில் உள்ள வேளாண்துறை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்துக்கு பல்வேறு தரப்பினரும் சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு  செய்ய வருகைதந்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமாா்  வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில்  உள்ள காலியிடம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள இடங்களை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தொழிலாளா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெசிந்தாமாா்ட்டின், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் அழகேசன், வட்டாட்சியா் தெய்வானை, பாா் கவுன்சில் செயலாளா் சிவேதி நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com