பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் தொடா்ந்து 8 ஆம் ஆண்டாக நிகழாண்டும் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் தொடா்ந்து 8 ஆம் ஆண்டாக நிகழாண்டும் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 25 மாணவா்கள், 5 மாணவிகள் என 30 போ் எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று நூறு சதவீதத் தோ்ச்சியை எட்டியுள்ளனா்.

இது குறித்து பள்ளித் தலைமையாசிரியா் செ. மாணிக்கராஜ் கூறியதாவது: இப்பள்ளியில் பயிலும் பாா்வை திறன் குறைபாடுடையோருக்கு பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்கள் நடத்தப்படுகின்றன. தோ்வுகளை ஆசிரியா்களின் உதவியுடன் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இப்பள்ளி தொடா்ந்து 8-ஆம் ஆண்டாக நிகழாண்டும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com