குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் (தன்னாட்சி) கலைக் கல்லூரியில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்ட பாடப்பிரிவுகளுக்கான

தஞ்சாவூா்: தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் (தன்னாட்சி) கலைக் கல்லூரியில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை (மே 7) தொடங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் அ. ஜான் பீட்டா் மேலும் தெரிவித்திருப்பது:

மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயரை பதிவு செய்து தாங்கள் விரும்புகிற கல்லூரி மற்றும் பாடப்பிரிவைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளும், அடைப்புக்குறிக்குள் இடங்களும் பற்றிய விவரம்:

பி.ஏ. தமிழ் (100), பி.ஏ. ஆங்கிலம் (80), பி.ஏ. வரலாறு தமிழ் வழி (60 ), பி.ஏ. வரலாறு ஆங்கில வழி (60), பி.ஏ. பொருளாதாரம் தமிழ் வழி (95), பி.ஏ. பொருளாதாரம் ஆங்கில வழி (40), பி.காம். ஆங்கில வழி (155), பி.பி.ஏ. ஆங்கில வழி (60), பி.எஸ்ஸி. கணிதம் தமிழ் வழி (25), பி.எஸ்ஸி. கணிதம் ஆங்கில வழி (98 ), பி.எஸ்ஸி. இயற்பியல் தமிழ் வழி (60), பி.எஸ்ஸி. இயற்பியல் ஆங்கில வழி (60), பி.எஸ்ஸி. வேதியியல் தமிழ் வழி (36), பி.எஸ்ஸி. வேதியியல் ஆங்கில வழி (36), பி.எஸ்ஸி. தாவரவியல் தமிழ் வழி (40), பி.எஸ்ஸி. தாவரவியல் ஆங்கில வழி (40), பி.எஸ்ஸி. விலங்கியல் தமிழ் வழி (40), பி.எஸ்ஸி. விலங்கியல் ஆங்கில வழி (40), பி.எஸ்ஸி. கணினி அறிவியல் ஆங்கில வழி (69), பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆங்கில வழி (30), பி.எஸ்ஸி. புவியியல் ஆங்கில வழி (20), புவியியல் தமிழ் வழி (20) ஆகிய பாடப்பிரிகளுக்கு மாணவிகள் செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

நெடுந்தொலைவு மாணவிகளின் வசதிக்காகக் கல்லூரியில் முதன்மை விடுதி செயல்படுகிறது. மேலும் அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட நலத்துறைகளால் நடத்தப்படுகிற நலத்துறை விடுதிகளும் கல்லூரி வளாகத்தில் செயல்படுகின்றன. சோ்க்கை பெற்ற பின்னா் விடுதிகளில் சேர விரும்புவோா் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க உதவி தேவைப்படும் மாணவா்கள் நலனுக்காக குந்தவை நாச்சியாா் அரசு கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் செயல்படும் மாணவா் சோ்க்கை உதவி மையத்தை அணுகலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com