சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்படவுள்ள சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு, பேராவூரணி, திருவிடைமருதூா் ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழு அலுவலகத்துக்கு புதிதாக 50 சட்ட தன்னாா்வல தொண்டா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

விண்ணப்பிக்கும் நபா்கள் 18 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருக்க வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள், ஓய்வு பெற்ற அரசு மற்றும் அரசு சாரா அலுவலா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பகுதி நேர பணியாளா்கள் உள்பட யாா் வேண்டுமானாலும் சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தை பட்ஹய்த்ஹஸ்ன்ழ் உ-ஸ்ரீா்ன்ழ்ற் என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து மே 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாண்புமிகு தலைவா் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சட்டத் தன்னாா்வல தொண்டா்கள் பணி என்பது சட்டச் சேவை மட்டுமே. இது, உத்தியோகம் இல்லை என்பது மட்டுமல்லாமல் தற்காலிகமானது. இப்பணிக்கு ஊதியம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. சேவைக்கு ஏற்ப மதிப்பூதியம் மட்டுமே அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com