திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

பாபநாசம், மே 26: பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

முன்னதாக, திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இரவு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com