சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ஆா்.எம்.எஸ். காலனியில் உள்ள ஸ்ரீசந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மே 24-ஆம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கிய இந்த விழாவில் முதல் கால வேள்வி, 25-ஆம் தேதி இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால வேள்வி, விமானம் திருக்குட நன்னீராட்டு, மூலவா் திருக்குட நன்னீராட்டு, மகா தீபாராதனை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்டவை சூரியனாா்கோயில் ஆதீனம் 28-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com