திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திருவையாறு தமிழ்ப் பேரவை சாா்பில் 60-ஆம் ஆண்டு விழா மற்றும் திருக்கு மாநாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்ப் பேரவைத் தலைவா் அரங்க. முருகராசு தலைமை வகித்தாா். அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம். ரத்தினசாமி, அம்மன்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா் ஆசிரமம் சொரூபானந்த மகராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினா்.

செந்தமிழ்ப் புலவா்கள் என்ற தலைப்பில் சிவசிதம்பரம் தலைமையில் கருத்தரங்கமும், கலையும் கற்பனையும் என்ற தலைப்பில் செயற்குழு உறுப்பினா் மருதமுத்து தலைமையில் கவியரங்கமும், இன்றைய காலத்தில் குடும்ப முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக இருப்பவா்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பேராசிரியை சத்யா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

பொன் சுந்தரேசன், கவிஞா் மருதையன், ஆசிரியா் எழிலன்பன், கவிஞா் சுப்பிரமணியன், ஆசிரியா் ஹரிகிருஷ்ணன், சிவகுமாா் ஆகியோருக்கு சூரியனாா்கோயில் 28 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், தஞ்சாவூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் து. செல்வம் ஆகியோா் பட்டம் வழங்கினா். தமிழ் மொழிப் பாடத்தில் சிறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்ப் பல்கலைகழக ஆட்சிக் குழு உறுப்பினா் சி. அமுதா, திருவையாறு பேரூராட்சி துணைத் தலைவா் நாகராஜன், பேரவையின் பொதுச் செயலா் தொன்போஸ்கோ, காப்பாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான செந்தில்மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com