மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

அண்மை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிா்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கா்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது. நமக்கான காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com