மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மக்கள் அதிகாரம் அமைப்பினர் 12 பேர் சிறையிலிருந்து விடுதலை

திருச்சியில் ஹிந்தி பிரசார முற்றுகை மற்றும் அதனைத் தொடர்ந்த நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில்

Updated On :18 ஏப்ரல் 2018, 8:55 am IST

திருச்சியில் ஹிந்தி பிரசார முற்றுகை மற்றும் அதனைத் தொடர்ந்த நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி தென்னூர் மகாத்மாகாந்தி நூற்றாண்டு நினைவு வித்யாலயா அருகிலுள்ள ஹிந்தி பிரசார சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பாலத்தின் கீழ்பகுதியைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் பிரசார சபாவை நோக்கி முன்னேறிச் செல்லாத வகையில் போலீஸார் தடுப்பு அமைத்திருந்தனர்.
அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி பிரசார சபாவின் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்தனர்.  சபாவின் பேனரும் கிழிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலச் செயலர் செழியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணனை போலீஸார் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் மறியல் நடத்தியதால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக  4 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட  65 பேரை கைது செய்து மக்கள் மன்றத்தில் வைத்திருந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதையடுத்து 2 பெண்கள் உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 13 பேருக்கும் திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இதையடுத்து மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பெண்களும், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரில் 10 பேரும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.  மற்றொருவர் புதன்கிழமை விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.