இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

துவரங்குறிச்சி அருகே   சொகுசு பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:28 am

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சுமார் 45 பயணிகளுடன்  சனிக்கிழமை இரவு புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது திடீரெனக் கவிழ்ந்தது.  
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ராபர்ட் (31), கிருஷ்ணன் (64), கபில் (23), புதுமை (60), மாரியப்பன், ராஜ்குமார், வள்ளியம்மாள், பிரித்தி, லெட்சுமி, செல்வராஜ், மாணிக்கவாசகம், சண்முகராஜ், அஜீத், மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் நயினார், 15 பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை காவல் ரோந்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை மீட்புக் குழுவினர் காயமடைந்தோரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  
அங்கு முதலுதவிக்குப் பின் அனைவரும் திருச்சி, மணப்பாறை  மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.  விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து  ஓட்டுநர் தென்காசியை சேர்ந்த நயினாரை (48) கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.