மணப்பாறையில் திமுக சார்பில் நடைபெற்ற கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பைக்கான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போஸ்டல் (அஞ்சல் துறை) அணி கோப்பையை கைப்பற்றியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகரில் திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளையொட்டி ஒன்றிய கழகம் சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 19) முதல் நான்கு நாள்கள் கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கபடிப் போட்டிகள் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு போஸ்டல் அணியும், சென்னை ஐசிஎப் அணியும் மோதின. இதில் 27க்கு 21 என்ற புள்ளிக் கணக்கில் ஐசிப் அணியை வீழ்த்தி தமிழ்நாடு போஸ்டல் அணி முதல் பரிசுத் தொகை ரூ.2 லட்சம் ரொக்கம், கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பையை கைப்பற்றியது.
அதேபோல, பெண்கள் பிரிவில் 15க்கு 17 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியாணா அணியை வீழ்த்திய புதுதில்லி அணி முதல் பரிசுத் தொகை ரூ.1 லட்சம் ரொக்கம், கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பையை கைப்பற்றியது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து தலா 27 ஆண், பெண்கள் அணி பங்கேற்றன.
விழாவுக்கு ஒன்றியச் செயலாளர் சி.ராமசாமி தலைமை வகித்தார்.
கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பரிசு, கோப்பைகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









