தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கர்நாடகத்தை நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 152 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கர்நாடகத்துக்கு நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 152 பேர் திருச்சியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :14 மே 2018, 10:33 pm

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கர்நாடகத்துக்கு நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 152 பேர் திருச்சியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மே 14-ஆம் தேதி, கர்நாடகம் வரையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்திருந்தது. அதன்படி திங்கள்கிழமை காலை அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திருச்சி தலைமை அஞ்சலகம் அருகே குவிந்தனர். தலைவர் ஷரீப் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்து நடைபயணத்துக்கு தடைவிதித்தனர். இதனையடுத்து போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடையையும் மீறி நடைபயணம் மேற்கொள்ள முயன்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 97 மகளிர் உள்ளிட்ட 152 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.