தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மின்விசை சைலா வீல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் 2016-17 ஆண்டுக்கான மழைக்கால பராமரிப்பு உதவித் தொகை பெற்ற 2,000 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு முதல்கட்டமாக மின்விசை சைலா வீல்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, மார்ச் 23 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி மற்றும் அரசு விழாவில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20,400 மதிப்பில் மின்விசை சைலா வீல்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை காதி கிராப்ட் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இந்த நிகழ்வில் பங்கேற்று சைலா வீல்களை வழங்கினார். நிகழ்வில், காதி கிராப்ட் மண்டலத் துணை இயக்குநர் என். மணிவாசகன், உதவி இயக்குநர் பாலகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

