தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், திண்டுக்கல் மாவட்டத் தலைவருமான என்.ஹரிஹரமுத்து ஐயர் தலைமை வகித்தார். திருச்சி எஸ். ராஜகோபால், மதுரை மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஜி.சூர்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மூத்தப் பொதுச் செயலர் வி.ஜெகன்னாதன் சிறப்புரையாற்றினார்.
சங்கத் துணை விதிகளுக்குப் புறம்பாக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் மாநில மூத்தப் பொதுச் செயலர் மற்றும் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய மாநிலத் தலைவரின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது.
பாலியல் புகார்களின் அடிப்படையில் சங்கத்துக்கும், நிர்வாகிகளுக்கும், பிராமணர் சமூகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்திய மாநிலத் தலைவர் என். நாராயணனை நீக்கி,புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது, மாநிலத் தலைவரின் பேரில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க துணை விதிகளின் கீழ், மாநில மூத்தப் பொதுச் செயலருக்கு முழு அதிகாரம் வழங்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநிலச் செயலர்கள் ஆர்.ஜெயந்தி ரங்கராஜன், எஸ்.ரமேஷ்குமார், எஸ்.நாகராஜன், துணைத் தலைவர் கே. சுப்பாராவ்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேம்பாலத்தில் மோதிய கன்டெய்னா் லாரி; போக்குவரத்து பாதிப்பு

மொகரம், பௌா்ணமி: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு

காத்திருக்கும் வாய்ப்பு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


