திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலியானது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த சேட் மகன் ரபீக்(24). இவர், புதன்கிழமை இரவு பணி நிமித்தமாக சென்னை செல்ல எர்ணாக்குளம் விரைவு ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். ரயில் பாலக்கரை ரயில்நிலையத்தை கடந்து செல்லும் போது ரபீக் பயணம் செய்த பெட்டியிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதே போல வியாழக்கிழமை திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அந்தவழியாக சென்ற ரயிலில் இருந்து 35 வயது மதிக்கத்தக்கவர் தவறி விழுந்து இறந்துகிடப்பதாக திருச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.