பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரித்திருப்பதாக திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன (ஐஐஎம்) இயக்குநர் பீமராய மெட்ரி தெரிவித்தார்.
திருச்சி தூய வளனார் கல்லூரியின் 175 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்வி குடிமக்களை மேம்படுத்துகிறது எனும் தலைப்பில் வியாழக்கிழமை விவாத அரங்கு நடைபெற்றது. இந்த அரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐஐஎம் இயக்குநர் பீமராய மெட்ரி பேசியது:
காமராஜர் காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்சி செய்த முதல்வர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், இன்றைக்கு கல்வி மேம்பாடு அடைந்துள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து, நடந்த விவாத அரங்கில் ராஜஸ்தான், மத்திய பிரேதசம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து தலா 3 மாணவர்கள் என்ற அடிப்படையில் 26 அணிகள் கலந்து கொண்டு விவாதம் செய்தன.
இறுதிச் சுற்றில் சென்னை, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக அணிகள் கலந்து கொண்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த செயின்ட் அலாய்சியஸ் அணி முதலிடம் பிடித்தது. சென்னை கிறித்துவ மகளிர் கல்லூரிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது.
கல்லூரி அதிபர் லியோனார்டு, செயலர் அந்தோனி பாப்புராஜ், முதல்வர் சேவியர் ஆரோக்கியசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.