தீ விபத்தில் மரக்கடை சேதம்
By DIN | Published On : 01st April 2019 09:20 AM | Last Updated : 01st April 2019 09:20 AM | அ+அ அ- |

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையில் சேகர் என்பவருக்குச் சொந்தமாக பழைய விறகுக்கடை மற்றும்மரக்கடை உள்ளது. இதையொட்டி முகமது அலிக்குச் சொந்தமான சுவிட்ச் பாக்ஸ் தயாரிக்கும் கடையும் உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
தொடர்ந்து, திருச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 4 வாகனங்களில் சென்ற 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னரே தீ கட்டுப்படுத்தப்பட்டது.
விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள், சுவிட்ச் பாக்ஸ்கள், மரங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.