தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றிக்காக பட்டினித்தவம் மேற்கொள்ள உள்ளதாக அனுபூதி மகான் என்கிற நந்தீஷா தெரிவித்தார்.
மிஸ்டர் - ஐ (திருவாகிய நான்) என்ற பெயரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுபூதி மகான் என்கிற நந்தீஷா, திருச்சியில் சுயேச்சை வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தி, அளித்த பேட்டி: திருவாகிய நான் அமைப்பின் சார்பில் 27 மக்களவைத் தொகுதிக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிக்குமான சுயேச்சை வேட்பாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய நிலத்தைக் காப்பாற்ற மும்மாரி திட்டம் செயல்படுத்தப்படும். என்பது உள்ளிட்ட 16 வாக்குறுதிகளை வலியுறுத்தி இவர்கள் பிரச்சாரம் செய்வர். இந்த சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் வரை, பட்டினியாக இருந்து தவம் செய்ய உள்ளேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.