கோளரங்கத்தில் ஏப்.24 முதல் கோடைகால பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 11th April 2019 08:31 AM | Last Updated : 11th April 2019 08:31 AM | அ+அ அ- |

திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கத்தில் ஏப்ரல் 24 முதல் 26 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, அண்ணா அறிவியல் மையத் திட்ட இயக்குநர் இரா. அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் உள்ள கோளரங்கத்தில், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை காலப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
ஏப்.24 , 25, 26 ஆகிய 3 நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த முகாமில் அறிவியல், கணிதம், வானவியல், யோகா, உளவியல், மின்னணுவியல், ரோபாடிக்ஸ், ஒரிகாமி மற்றும் இரவு வான் நோக்குதல் போன்ற பல வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
முகாமிற்கு நுழைவுக்கட்டணமாக ரூ.450 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி முகாமில் சேருவதற்கு விண்ணப்பிக்க ஏப். 22ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு அண்ணா அறிவியல் கோளரங்கத்தின் தொலைபேசி எண்-0431-2331921 அல்லது 0431-2332190 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.