தேர்தல் விதிமீறல்: அமமுக, காங்கிரஸ் மீது வழக்கு
By DIN | Published On : 11th April 2019 08:30 AM | Last Updated : 11th April 2019 08:30 AM | அ+அ அ- |

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ், அமமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து சுற்றி வந்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. பேட்டைவாய்த்தலை மில்கேட் பகுதியில் விதிமுறையை மீறி அரசு சுவரில் அமமுகவினர் கட்சி சின்னத்தை வரைந்துள்ளனர்.
இதே போல அல்லூர் பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் அவர்களது கட்சி சின்னத்தை வரைந்துள்ளனர். இது தொடர்பாக, பேட்டைவாய்த்தலை, ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.