தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 12th April 2019 09:36 AM | Last Updated : 12th April 2019 09:36 AM | அ+அ அ- |

தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், இளநிலை படை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, வியாழக்கிழமை அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காவல்துறைக்கு துணையாக பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பம் சமர்ப்பித்த மற்றும் சமர்ப்பிக்காத முன்னாள் படை வீரர்கள், இளநிலை படை அலுவலர்கள் பணிக்கான ஆவணங்கள், அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும். மேலும், விவரங்களுக்கு 98654-60505, 63744-56638 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.