மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு
By DIN | Published On : 12th April 2019 09:36 AM | Last Updated : 12th April 2019 09:36 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்களவைத் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவலர் ரவிச்சந்திரன், இயல்முறை மருத்துவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர்கள் குமார், கோபிநாத், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
கோவில்பட்டி சாலை காமராஜர் சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்துநிலையம், பெரியார் சிலை திடல் வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுபெற்றது.
அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.