காதல் விவகாரம்: இளைஞர் தற்கொலை
By DIN | Published On : 17th April 2019 05:18 AM | Last Updated : 17th April 2019 05:18 AM | அ+அ அ- |

திருச்சி பொன்மலையில் காதல் விவகாரத்தில் இளைஞர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி விமான நிலையம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (26). இணையம் மூலம் உணவுப்பொருள்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் பொன்மலை அடிவாரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜனுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், ஏற்கெனவே பழகிய பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த ராஜன், திங்கள்கிழமை பொன்மலை அடிவாரப் பகுதியிலுள்ள பெண் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பொன்மலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...