தொட்டியம் பகுதி விவசாய சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு
By DIN | Published On : 17th April 2019 05:19 AM | Last Updated : 17th April 2019 05:19 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவு அளிப்பதாக தொட்டியம் பகுதி விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொட்டியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வட்ட வாழை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம், தொட்டியம் பகுதி வெறறிலை வியாபாரிகள் நலச்சங்கத்தின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரத்தின் போது குறிப்பிட்டு, அதை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார். அதனை வரவேற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் காந்திப்பித்தன், சுகுமார், தியாகராஜப் பிள்ளை ஆகியோர் தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...