மணப்பாறை பகுதிகளில் இறுதிக் கட்ட பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 05:16 AM | Last Updated : 17th April 2019 05:16 AM | அ+அ அ- |

கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை மாலை இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மு. தம்பிதுரைக்கு ஆதரவாக அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சின்னச்சாமி, ஒன்றியச் செயலர் வெங்கடாசலம் தலைமையில் பன்னாங்கொம்பு, காவல்காரன்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்களில் இரு சக்கர வாகனப் பேரணியாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவனை ஆதரித்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும், கரூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து மணப்பாறை பெரியார் சிலை திடல் பகுதியிலும் திரைப்பட நடிகர் ராஜேந்திரநாத் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திமுக : திருச்சி மாவட்டதிமுக பொருளாளர் கோவிந்தராஜ், மதிமுக ஒன்றியச் செயலர் துரைராஜ் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில்சென்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...