ரயில்வே பணியாளர்களுக்கு பாராட்டு விழா
By DIN | Published On : 17th April 2019 05:19 AM | Last Updated : 17th April 2019 05:19 AM | அ+அ அ- |

திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 64 ஆவது ரயில்வே வார விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவுக்கு தெற்குரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பி. உதய்குமார் ரெட்டி தலைமை வகித்தார். உதவி கோட்ட மேலாளர் ஆர். ஆய்வு முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய 157 ரயில்வே ஊழியர்களுக்கு தென்கிழக்கு ரயில்வே துறையின் ஓய்வு பெற்ற பொதுமேலாளர் என்.எஸ்.கஸ்தூரிரங்கன் விருதுகளை வழங்கி பேசினார். ரயில்வே கோட்ட தனி அலுவலர் பி.கே.சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார். ரயில்வே பணியாளர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...