கடவுச்சீட்டில் போலி முத்திரை: 3 பேர் கைது
By DIN | Published On : 26th April 2019 03:11 AM | Last Updated : 26th April 2019 03:11 AM | அ+அ அ- |

கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பிகார் மாநிலம் பந்தாரியா பகுதியைச் சேர்ந்த அஸ்ரப்(35), குல்விந்தர்சிங்(30), மும்பைச் சேர்ந்த பினான்கோத்நாத்குப்தா(37) ஆகிய 3 பேரும் தங்களது கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் விமானநிலைய போலீஸார் 3 பேரையும் கைது செய்து வியாழக்கிழமை சிறையிலடைத்தனர்.